TNPSC EXAM
SUBJECT: வரலாறு ஒரு வரி வினாக்கள்
1. சிந்து வெளி மக்கள் எந்த ஆடைகளை அணிந்தனர்?
பருத்தி, கம்பளி
2. சிந்து சமவெளி மக்களில் ஏழைகள் எதனால்
செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்தனர்?
கிளிஞ்சல்கள், தாமிரம்
3. சிந்து வெளி மக்கள் ______ எனப்படும் சுடு
மண்பாண்டம் செய்வதில் திறமை மிக்கவர்களாக இருந்தனர்?
டெர்ரா கோட்டா
4. சிந்துவெளி நாகரீகத்தின் சிற்பக்
கலைக்கு உதாரணம் எது? வெண்கலத்தால் ஆன நாட்டிய மங்கையின் உருவச்சிலை, தாடியுடன்
காட்சி தரும் மனிதனின் சுண்ணாம்புக்கல் சிலை
5. சிந்து சமவெளி மக்கள் வணங்கிய தெய்வங்கள் எவை
எவை?
பசுபதி என்ற சிவன், பெண் கடவுள், லிங்கம், சூலம், மரம்
6. சிந்து சமவெளி மக்கள் இறந்தவர்களை புதைக்கும்
போது சடலங்களுடன் எதையும் சேர்த்து புதைத்தனர்?
உணவு, அணிகலன்கள்
7. லோத்தல் என்னும் செம்புக் கற்காலத் துறைமுகம்
காணப்படும் இடம் எந்த மாநிலம்?
குஜராத்
8. சிந்து மக்களுக்கு தெரியாத உலோகம் எது?
இரும்பு
9. எந்தப்பகுதி உலகிலேயே மிகமிகத் தொன்மையானது
என்று வரலாற்று அறிஞர் கூறுவர்?
விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள பகுதி
10. திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள்
பேசும் மொழி எது? தமிழ்
0 Comments