TNPSC EXAM
SUBJECT: குடிமையியல் ஒரு வரி வினாக்கள்
1. கிராமத்தில் வளர்ச்சிக்குரிய திட்டங்கள் ஆண்டு வரவு ___________ செலவுத் திட்டங்கள், திட்டங்களின் பயனாளிகள் யார் என்பது போன்ற அனைத்தும் எதன் ஒப்புதல் பெற்ற பிறகுதான் நடைமுறைப்படுத்தப்படும்?
ஊர் மன்றக்கூட்டத்தில்
2. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு அமைக்கப்படுவது ______ ஆகும்.
ஊராட்சி ஒன்றியம்
3. தேர்தல் மூலம் எத்தனை மக்கள் தொகைக்கு ஒரு பிரதிநிதி வீதம் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்?
ஐந்தாயிரம்
4. ஊர் மன்றக் கூட்டங்கள் ஆண்டுக்கு எத்தனை முறை கூடுகின்றன?
நான்கு முறை
5. ஊராட்சி ஒன்றியத்தின் பணிகளை மேற்பார்வை செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட நிர்வாகத்தின் கீழ்_________ உள்ளது.
மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமை
6. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு _______ அமைக்கப்பட்டுள்ளது?
மாவட்ட ஊராட்சி
7. எத்தனை மக்கள் தொகைக்கு ஒருவர் என்ற அடிப்படையில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?
50000
8. மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் எவ்வளவு?
ஐந்து ஆண்டுகள்
9. மாவட்டத் திட்டக்குழுவின் தலைவர் யார்? மாவட்ட ஊராட்சிக் குழுவின் தலைவரே இதன் தலைவர்
10. மாவட்டத் திட்டக் குழுவின் உறுப்பினர்களை _________ தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கின்றனர்?
உள்ளாட்சிப் பிரதிநிதிகள்
0 Comments