TNPSC EXAM
SUBJECT: அறிவியல் ஒரு வரி வினாக்கள்
1. சளித்தொல்லை, கோழை அகற்றும், மார்புச்சளி நீக்கும், உடல் பலம் தரும் மூலிகை எது?
தூதுவளை
2. மஞ்சள் காமாலை நோயைத் தீர்க்கும் மூலிகை எது?
கீழாநெல்லி
3. வயிற்றுப் பூச்சியை நீக்கும் மூலிகை எது?
வேம்பு
4. வாய்ப் புண்ணைக் குணப்படுத்தவும், உடம்பிற்கு குளிர்ச்சியையும் தரும் மூலிகை எது?
நெல்லிக்காய்
5. சளி, கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
துளசி
6. வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும் மூலிகை எது?
ஓமவல்லி
7. வயிறு தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை எது?
வசம்பு
8. கிருமி நாசினி, உணவுக்காகவும் பயன்படும் மூலிகை எது?
மஞ்சள்
9. பசியைத் தூண்டும், செரிமானமின்மையை நீக்கும் மூலிகை எது?
பிரண்டை
10. செரிமானக் கோளாறுகளை நீக்கும் மூலிகை எது?
இஞ்சி
0 Comments