TNPSC EXAM
SUBJECT: உயிரியல் ஒரு வரி வினாக்கள்
1.
தலைமுறைகளில் பெற்றோர்களின் பண்புகளை மட்டுமே ஒத்திருக்காமல், அதன் முந்தைய தலைமுறை பண்புகளையும் காணலாம். இத்தகைய கடத்தப்படும் பண்புகளின் மாற்றங்களே ______ எனப்படும்.
வேறுபாடுகள்
2. பாரம்பரியக் கடத்துதலை முதன்முதலில் வெளியிட்டவர் யார்?
கிரிகன் ஜோகன் மெண்டல் (1822 –1884)
3. கிரிகன் ஜோகன் மெண்டல் தனது தோட்டத்தில் எந்த செடியை வைத்து தனது ஆராய்ச்சியை மேற்கொண்டார்?
பட்டாணிச் செடி
4. மெண்டல் தனது ஆராய்ச்சியில் பட்டாணிச் செடியில் தலைமுறையில் பெறப்பட்ட நெட்டை:குட்டை பண்புகள் ____ என்ற விகிதத்தில் இருந்தன. 3:1 விகிதம்
5. மெண்டல் எந்த நாட்டைச் சார்ந்த துறவி?
ஆஸ்திரிய – அகஸ் தீனிய துறவி.
6. மரபுவழி கடத்தல் விதிகளை வெளியிட்டவர் யார்?
கிரிகன் ஜோகன் மெண்டல் (1822 –1884)
7. புறத்தோற்றத்தில் வெளிப்படையாகக் காணப்படும் பண்புகளான நெட்டை அல்லது குட்டை, ஊதா அல்லது வெள்ளை நிறம் போன்றவைப் _____ எனப்படும் .
புறத்தோற்றப் பண்பு
8. புறத்தோற்றப் பண்புகளுக்குக் காரணமான குரோமோசோம் அல்லர் ஜீன் அமைப்பு _____ எனப்பட்டன.
ஜீனாக்கப் பண்பு
9. இரு வேறுபட்ட பண்புகளைக் கொண்டுள்ள ஜீன் அமைப்புத் தன்மைக்கு ____ என்று பெயர்.
அல்லீல்கள்
10. அல்லீல்கள் வெளிப்படுத்தும் பண்பிற்கு _____ என்று பெயர். அல்லீலோ மார்புகள்
0 Comments