TNPSC EXAM
ஒரு வரி வினாக்கள்
1. வள்ளுவர் என்றால் பொருள் யாது?
அரசருக்கு
அந்தரங்க ஆலோசனை கூறும் ஓர் உயர்ந்த அலுவலர்
2. வாசுகி யாருடைய மகள்?
மார்க்கசகாயர்
என்னும் வேளாளரின் மகள்
3. திருவள்ளுவர் செய்த தொழில் என்ன?
நெசவுத்தொழில்
4. மனிதன் மனிதனாக வாழ, மனிதன் மனிதனுக்குக் கூறிய அறிவுரைதான் ___________
ஆகும்?
திருக்குறள்
5. ____________ என்னும் அடைமொழியைப் பெற்றுத் திருக்குறள் என வழங்கப்
பெறுகிறது?
திரு
6. திருக்குறள் எத்தனை பிரிவுகளைக் கொண்டது? அவை யாவை?
மூன்று
பிரிவுகளைக் கொண்டது. அவை, அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால்
7. இந்நூல் திருக்குறள் என்று எதனால் பெயர் பெற்றது?
திரு+குறள்.
மேன்மையான குறள் வெண்பாக்களால் இயற்றப்பட்டதால் இப்பெயர் பெற்றது.
8. திருக்குறள் எத்தனை அதிகாரங்களை உடையது?
133
அதிகாரங்கள்
9. திருக்குறள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் எத்தனை பாடல்களை கொண்டது?
10
10. திருக்குறள் எத்தனை குறட்பாக்களால் ஆனது?
ஆயிரத்து
முந்நூற்று முப்பது
0 Comments